ADDED : ஆக 26, 2026 07:33 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல், ஆக.27-
திண்டுக்கல் மேட்டுப்பட்டி அருகே பொன்னம்மாள் நகரை சேர்ந்தவர் போஸின் மனைவி சைனி 40. இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த ராபின் 29, என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ராபின் சவேரியார்பாளையத்தை சேர்ந்த தனது தம்பி சூர்யா 26, நண்பர் வெங்கடகிருஷ்ணன் 24, ஆகியோருடன் சேர்ந்து சைனி வீட்டில் நேற்று முன்தினம் இரவு பெட்ரோல் குண்டு வீசினார். இது வீட்டருகே உள்ள மின்கம்பத்தில் பட்டு வெடித்து சிதறியது. இதுகுறித்த புகாரில் தாலுகா இன்ஸ்பெக்டர் உலகநாதன் விசாரணை நடத்தி ராபின், சூர்யா, வெங்கடகிருஷ்ணன் மூவரையும் கைது செய்தார்.
