ADDED : ஆக 26, 2026 07:33 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல், ஆக.27-
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அபுதாகிர் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் நாசர், முகமது அலி முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் அரசு பணிகளில் ஒப்பந்த ஊழியர்கள் நியமனம், பைக் டாக்ஸி முறையை கைவிட வலியுறுத்தி செப்., 11ல் ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கிளை தலைவர் சம்சுதீன், நிர்வாகிகள் சர்தார் சேட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
