ADDED : ஆக 26, 2026 07:33 PM
அ நிறம் | அளவு
பழநி, ஆக.27-
பழநி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பல ஆண்டுகளாக பணிபுரிந்த துாய்மை பணியாளர்கள் 17 பேரை பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் ஜெயசீலன், நகராட்சி துணைத்தலைவர் கந்தசாமி, மாநிலக்குழு உறுப்பினர் மோகனா, மாவட்ட துணைத்தலைவர் மனோகரன், பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன், துாய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.
