ADDED : நவ 15, 2025 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: கொடைக்கானல் பழம்புத்தூரில் வன விலங்கு தாக்கி குதிரை பலியானது.
பழம்புத்தூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் இவரது வளர்ப்பு குதிரை பட்டா நிலத்தில் மேய்ச்சலில் ஈடுபட்ட போது அவ்வழியே வந்த வன விலங்கு தாக்கியதில் பலியானது. விவசாயிகள் தரப்பில் புலி தாக்கி குதிரை பலியானதாக கூறப்படுகிறது. ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியினர் குதிரையை கொன்ற வன விலங்கு குறித்து விசாரிக்கின்றனர். மேலும் பலியான குதிரைக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

