ADDED : ஜன 11, 2026 05:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குஜிலியம்பாறை: சின்னக்குளத்தில் இரவு 11:30 மணிக்கு தாசில்தார் ரவிக்குமார் திடீர் தணிக்கை மேற்கொண்ட போது கிராவல் மண் ஏற்றி வந்த லாரியை மடக்கி சோதித்த போது முறையான ஆவணங்கள் இன்றி 2 யூனிட் கிராவல் மண் கடத்தி வந்தது தெரிந்தது.
லாரி டிரைவர் சி.அம்மாபட்டி தமிழரசன் தப்பினார். குஜிலியம்பாறை போலீசில் புகார் அளிக்க எஸ்.ஐ., விஜயலிங்கன் லாரியை கைப்பற்றி விசாரித்து வருகிறார்.

