/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
2ம் நாளாக டிட்டோ ஜாக் மறியல்; 470 பேர் கைது
/
2ம் நாளாக டிட்டோ ஜாக் மறியல்; 470 பேர் கைது
ADDED : ஜூலை 20, 2025 04:59 AM

திண்டுக்கல்: டிட்டோ ஜாக் நடத்திய  2 ம் நாள் ஆர்ப்பாட்டம்,  மறியலை தொடர்ந்து  470 பேர் கைது செய்யப்பட்டனர்.
தி.மு.க., அரசின் தேர்தல் வாக்குறுதிப்படி மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் காலமுறை ஊதியத்தில் உடனடியாக நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ,டிட்டோ ஜாக் அமைப்பினர் 2 ம் நாளாக  திண்டுக்கல் ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  நிர்வாகிகள் ஹெலன்மேரி, யசோதா, கீதா, சுதா,எஸ்தர்லதா, வசந்தாதேவி, பாண்டியம்மாள்   தலைமை வகித்தனர்.
உயர்மட்ட  குழு உறுப்பினர்கள் துரைராஜ், கணேசன் பேசினர். தொடர்ந்து ஒன்றிய  அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக வந்த ஆசிரியர்கள் பஸ் ஸ்டாண்ட் எதிரே ரோடு மறியலில் ஈடுபட்டனர்.  470 பேரை போலீசார் கைது செய்னர்.

