ADDED : ஜூலை 09, 2025 07:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பான டிட்டோ ஜாக் சார்பில் போராட்ட ஆயத்த கூட்டத்தில் டிட்டோ ஜாக் அமைப்பு சார்பில் ஜூலை 16, 17, 18  ல் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் மறியல் நடத்த முடிவெடுக்கப்பட்டது.
இதற்கான  மாவட்ட  திட்டமிடல் கூட்டம் திண்டுக்கல்லில்  நடைபெற்றது. தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் நடராஜன் தலைமை வகித்தார்.   மாநில டிட்டோ ஜாக் உயர்மட்டக்குழு உறுப்பினர் வின்சென்ட் பால்ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ,தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி  மாநில பொருளாளர் துரைராஜ்  கலந்து கொண்டனர்.

