ADDED : ஆக 05, 2026 04:11 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: அரசு போக்குவரத்து கழக திண்டுக்கல் மண்டல தலைமை அலுவலகம் முன் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பொதுச்செயலாளர் பொன்செந்தில் தலைமை வகித்தார். வயது, பணி மூப்பு அடிப்படையில் பணிகள் வழங்க வேண்டும், கி.மீ., அடிப்படையில் பணி வழங்கும் புதிய நடைமுறை கூடாது, திண்டுக்கல் மண்டல நிர்வாகத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். நுாற்றுக்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
