நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : -நத்தம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள கடைகளில் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, எஸ்.ஐ., தர்மர், எஸ்.பி., தனிப்பிரிவு போலீஸ் சின்னக்குமாரசாமி உள்ளிட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பஸ்ஸ்டாண்ட் பகுதியில் உள்ள ஒரு கடையில் விற்பனைக்காக புகையிலைப் பொருட்கள் வைத்திருந்த நத்தத்தை சேர்ந்த ஜஹாங்கீர் 54. என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 560 கிலோ புகையிலையை பறிமுதல் செய்தனர்.

