/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
புகையிலைப்பட்டி சர்ச் விழா ரதபவனி
/
புகையிலைப்பட்டி சர்ச் விழா ரதபவனி
ADDED : மே 17, 2025 01:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி: -சாணார்பட்டி அருகே புகையிலைப்பட்டி தேவசகாயம் சர்ச் திருவிழாவில் மின் ரதபவனி நடைபெற்றது.
புகையிலைபட்டி தேவ சகாயம் சர்ச் ஆண்டு திருவிழா மே 13 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. மாலை ஆலய அர்ச்சிப்பு விழா ,புனிதரின் சுரூப நிலை நாட்டல், இரவு பாதிரியார் நெல்சன் அமல்ராஜ் தலைமையில் பாடல் திருப்பலி நடைபெற்றது.
தேவ சகாயம் சுரூபமானது புகையிலைப்பட்டி இன்னாசியார் சர்ச்சிலிருந்து ஊர்வலமாக எடுத்து வர அர்ச்சிப்பு செய்யப்பட்டது. தொடர்ந்து புனிதரின் மின் ரத பவனி, பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமானோர் பங்கேற்றனர்.