sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பழநியில் இன்று பரணி தீபம் நாளை திருக்கார்த்திகை தீபம்

/

பழநியில் இன்று பரணி தீபம் நாளை திருக்கார்த்திகை தீபம்

பழநியில் இன்று பரணி தீபம் நாளை திருக்கார்த்திகை தீபம்

பழநியில் இன்று பரணி தீபம் நாளை திருக்கார்த்திகை தீபம்


ADDED : டிச 12, 2024 02:14 AM

Google News

ADDED : டிச 12, 2024 02:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி:பழநி முருகன் கோயிலில் இன்று பரணி தீபமும் நாளை (டிச. 13) திருக்கார்த்திகை தீபமும் ஏற்றப்பட உள்ளது.

பழநி முருகன் கோயிலில் டிச. 7ல் காப்பு கட்டுதலுடன் திருக்கார்த்திகை தீபத் திருவிழா துவங்கியது.

தினமும் சண்முகார்ச்சனை , சின்ன குமாரசுவாமி தங்கச் சப்பரத்தில் எழுந்தருளல், யாகசாலை நடைபெற்றது. இன்று மாலை 5:30 மணிக்கு சாயரட்சை பூஜையில் பரணி தீபம் ஏற்றப்பட்டு சண்முகார்ச்சனை நடைபெறும்.

திருக்கார்த்திகை தீபத் திருநாளான நாளை (டிச. 13 ) அதிகாலை 4:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், விசேஷ பூஜை, மதியம் 2:00 மணிக்கு சண்முகார்ச்சனை, சண்முகர் தீபாராதனை நடைபெறுகிறது.

மாலை 4:00 மணிக்கு சாயரட்சை பூஜை, 6:00 மணிக்கு திருக்கார்த்திகை தீபம், சொக்கப்பனை ஏற்றுதல் நடைபெறும். இதையொட்டி நாளை மதியம் 2:00 மணி முதல் மாலை 6:00 வரை பக்தர்கள் கோயிலுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். பக்தர்கள் யானை பாதை வழியாக மேலே சென்று படிப்பாதை வழியாக கீழே வரும் வகையில் ஒரு வழி பாதை அமல் படுத்தப்படுகிறது. நாளை இரவு தங்கரத புறப்பாடும் நடைபெறாது.






      Dinamalar
      Follow us