/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் உயர்ந்தது டோல்கேட் கட்டணம்
/
திண்டுக்கல்லில் உயர்ந்தது டோல்கேட் கட்டணம்
ADDED : ஏப் 01, 2025 05:22 AM
திண்டுக்கல்: -திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மூன்று டோல்கேட்களில் இரு டோல்கேட்டில் வாகனங்களுக்கான கட்டணம் இன்று முதல் உயர்ந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஏப் 1 , செப் . 1 ல் டோல்கேட் கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் ஏப். 1 முதல் டோல்கேட்டில் 5 முதல் 10 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தி வசூலிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. அதன்படி தமிழகத்தில் உள்ள 78 டோல்கேட்களில் முதற்கட்டமாக 40 இடங்களில் இன்று முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது. வாகனங்களின் வகைகளின்படி 6 வகையான கட்டணங்கள் நிர்ணயித்து வசூலிக்கப்பட உள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைரோடு, சத்திரப்பட்டி , நத்தம் பரளிபுதுாரில் என 3 இடங்களில் டோல்கேட்கள் உள்ளன. கொடைரோடு டோல்கேட்டில் ஏப்.1 ல் எந்தவித கட்டணமும் உயர்த்தப்பவில்லை. மற்ற 2 இடங்களிலும் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.ஒட்டன்சத்திரம் - மடத்துக்குளம் தேசிய நெடுஞ்சாலையில் சத்திரப்பட்டி அருகே அமைந்துள்ள டோல்கேட் கட்டண விவரம் :...
வாகனங்களின் வகை / பழைய கட்டணம் / புதிய கட்டணம்/ கார், ஜீப் ,இலகு ரக வாகனம் / ரூ. 100 / ரூ. 105/ இலகுரக வணிக வாகன வகை, மினிபஸ் / ரூ. 165 / ரூ. 170/ பஸ் ,டிரக் (2 அச்சு ) /ரூ. 345 / ரூ.360/ 3 அச்சு கொண்ட வணிக வாகனங்கள் / ரூ.380/ ரூ. 390/ பல அச்சுக்கள் கொண்ட கட்டுமான இயந்திரம் / ரூ.545 / ரூ.560/ அதிக அளவு கொண்ட வாகனம் ( 7 க்கு மேற்பட்ட அச்சு ) /ரூ. 660 /ரூ. 685/*வணிக உபயோகம் அல்லாத உள்ளூர் வாகனங்களுக்கு விதிக்கப்படும் மாதாந்திர கட்டணம் ரூ.340 லிருந்து ரூ. 350 ஆக உயர்ந்துள்ளது .
...........
நத்தம் பரளிபுதுாரில் அமைந்துள்ள டோல்கேட் கட்டண விவரம்:
கார், ஜீப் ,இலகு ரக வாகனம் / ரூ. 190 / ரூ. 195/ இலகுரக வணிக வாகன வகை, மினிபஸ் / ரூ. 305 / ரூ. 315/
பஸ் ,டிரக் (2 அச்சு ) /ரூ. 635 / ரூ.655/ 3 அச்சு கொண்ட வணிக வாகனங்கள் / ரூ.690/ ரூ. 715/
பல அச்சுக்கள் கொண்ட கட்டுமான இயந்திரம் / ரூ.995/ ரூ.1030/
அதிக அளவு கொண்ட வாகனம் ( 7 க்கு மேற்பட்ட அச்சு ) /ரூ. 1210 /ரூ. 1255/
*வணிக உபயோகம் அல்லாத உள்ளூர் வாகனங்களுக்கு விதிக்கப்படும் மாதாந்திர கட்டணம் ரூ.6250லிருந்து ரூ. 6470 ஆக உயர்ந்துள்ளது .தமிழகத்தில் இங்கு தான் அதிகளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது .
.........

