ADDED : டிச 31, 2025 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைரோடு: கொடைரோடு டோல்கேட்டில் பணியாற்றும் 40க்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு இரு மாதத்திற்கான சம்பளம் வழங்க வில்லை. இதனால் டோல்கேட் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊதியம் வழங்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று (நேற்று) இரவுக்குள் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என டோல்கேட் நிர்வாகம் சார்பில் உத்தர வாதம் வழங்க கலைந்து சென்றனர்.
சுங்க சாவடி நிர்வாகத்திடம் கேட்டபோது, ரெசி என்கிற தனியார் நிறுவனம் மூலம் தான் பனியாளர்கள் பணியாற்றுகின்றனர். சுங்கச்சாவடி நிர்வாகம் அந்த நிறுவனத்திற்கு பணம் கொடுத்துவிட்டது. அந்த நிறுவனம் தான் சம்பளம் வழங்க வேண்டும் என்றனர்.

