ADDED : அக் 14, 2024 08:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலை அதிகரித்து ரூ.57க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஒட்டன்சத்திரம், சாலைப் புதுார், பாவாயூர், கல்லுப்பட்டி கேதையுறும்பு காளாஞ்சிபட்டி, அம்பிளிக்கை, காவேரியம்மாபட்டி, தங்கச்சியம்மாபட்டி, அரசப்பிள்ளைபட்டி சுற்றிய கிராமப் பகுதிகளில் ஒட்டு தக்காளி அதிகமாக பயிரிடப்படுகிறது.
தற்போது அறுவடை பல பகுதிகளில் அறுவடை செய்யப்படுகிறது. இதனால் மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்தது. இருந்தபோதிலும் தேவைக்கேற்ப தக்காளி வரத்தை இல்லாததால் விலை அதிகரித்து ரூ.57க்கு விற்றது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.