ADDED : ஆக 22, 2025 11:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம், கப்பலப்பட்டி, அம்பிளிக்கை, சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் தக்காளி அதிகமாக விளைவிக்கப்படுகிறது. இரு வாரங்களுக்கு முன் வரை பல இடங்களில் அறுவடை தொடர்ந்ததால் மார்க்கெட்டிற்கு வரத்து அதிகமாக இருந்தது.
இந்நிலையில் இப்பகுதியில் பெய்த மழை காரணமாக தக்காளி செடிகளில் இருந்த பூக்கள், காய்கள் உதிர்ந்து விட்டன. இதனால் விளைச்சல் பாதிக்கப்பட்டதால் மார்க்கெட்டிற்கு வரத்து குறைய தொடங்கியது. இதற்கு ஏற்ப விலையும் அதிகரித்தது. இருவாரங்களுக்கு முன் கிலோ தக்காளி ரூ.28 க்கு விற்பனை ஆனது. அன்று முதல் தினந்தோறும் விலை அதிகரித்து நேற்று கிலோ ரூ. 48க்கு விற்றது.