/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இரு மடங்காக அதிகரித்த தக்காளி விலை
/
இரு மடங்காக அதிகரித்த தக்காளி விலை
ADDED : டிச 28, 2025 06:00 AM

ஒட்டன்சத்திரம்: வரத்து குறைவால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி விலை இருமடங்காக அதிகரித்து கிலோ ரூ.64 க்கு விற்பனை ஆனது.
ஒட்டன்சத்திரம், சாலைப்புதூர், அம்பிளிக்கை, கள்ளிமந்தையம், பெரிய கோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் தக்காளி அதிகமாக பயிரிடப்படுகிறது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை அறுவடை மும்முரமாக இருந்ததால் வரத்து அதிகரித்து தக்காளி கிலோ ரூ.32 க்கு விற்றது. இந்நிலையில் தற்போது பல இடங்களில் அறுவடை குறைந்ததால் மார்க்கெட்டுக்கு வரத்து குறைய தொடங்கியது. இருந்தபோதிலும் வியாபாரிகள் கொள்முதல் அளவை குறைக்காமல் இருந்ததால் விலை இருமடங்காக அதிகரித்து ரூ.64 க்கு விற்பனை ஆனது. கமிஷன் கடை உரிமையாளர் முருகேசன் கூறுகையில், 'இனிவரும் நாட்களில் தக்காளி வரத்து குறைய வாய்ப்பு உள்ளதால் விலை மேலும் அதிகரிக்கும்' என்றார்.

