UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 08:56 PM
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலை அதிகரித்து கிலோ ரூ.53க்கு விற்றது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், சாலைப்புதுார், பாவாயூர், கல்லுப்பட்டி, கேதையுறும்பு, காளாஞ்சிபட்டி, அம்பிளிக்கை, காவேரியம்மாபட்டி, தங்கச்சியம்மாபட்டி, அரசப்பிள்ளைபட்டி, அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒட்டுத் தக்காளி அதிகமாக பயிரிடப்படுகிறது.
கடந்த சில நாட்களாக தக்காளி அறுவடை நடந்ததால் மார்க்கெட்டிற்கு வரத்து அதிகரித்து கிலோ ரூ.28க்கு விற்றது. தற்போது அறுவடை குறைந்து போனதால் விலை அதிகரித்து கிலோ ரூ.53க்கு விற்றது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கமிஷன் கடை உரிமையாளர் ஒருவர் கூறுகையில், ‘வரும் நாட்களில் தக்காளி வரத்து இன்னும் குறையக்கூடும் என்பதால் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது’ என்றார்.
