UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 09:16 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் புதிய தமிழகம் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் வன்னியரசு உருவப்படத்தை காலணியால் அடித்து அவமதித்தை கண்டித்து மாவட்ட வி.சி.க., சார்பில் நாகல் நகர் ரவுண்டானாவில் ரோடு மறியல் செய்தனர். மாவட்ட செயலாளர் மைதீன் பாவா தலைமை வகித்தார்.
புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமிக்கு எதிராகவும், அமைச்சர் வன்னியரசு உருவப்படம் அவமதிக்கப்பட்டதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். கிருஷ்ணசாமியின் உருவ பொம்மை எரிக்க முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அனுமதியின்றி ரோடு மறியலில் ஈடுபட்ட வி.சி.க.,வினர் 30 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அனைவரையும் விடுவித்தனர்.
