/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாவட்டத்தில் 50 பயனாளிகளுக்கு ரூ.37.20 லட்சம் டாம்கோ கடன்
/
மாவட்டத்தில் 50 பயனாளிகளுக்கு ரூ.37.20 லட்சம் டாம்கோ கடன்
மாவட்டத்தில் 50 பயனாளிகளுக்கு ரூ.37.20 லட்சம் டாம்கோ கடன்
மாவட்டத்தில் 50 பயனாளிகளுக்கு ரூ.37.20 லட்சம் டாம்கோ கடன்
ADDED : அக் 05, 2024 04:26 AM
திண்டுக்கல்: ''திண்டுக்கல் மாவட்டத்தில் 50 பயனாளிகளுக்கு டாம்கோ வாயிலாக ரூ.37.20 லட்சம் மதிப்பிலான கடன்தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாக,'' தலைவர் பெர்னாண்டஸ் ரத்தினராஜா பேசினார்.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்(டாம்கோ) கடன் திட்டங்கள் தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியதாவது: சிறுபான்மை மக்களின் பொருளாதாரத்தை முன்னேற்றும் வகையில் டாம்கோ மூலம் தனிநபர் கடன் திட்டம் கீழ் வியாபாரம் செய்யவும், தொழில் தொடங்கிடவும்,ஏற்கனவே செய்து வரும் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கும் கடன் வழங்கப்படுகிறது. விசாரத் (கைவினை கலைஞர் கடன் திட்டம்) திட்டத்தின் கீழ் சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் மூலப்பொருட்கள், உபகரணங்கள், இயந்திரங்கள் வாங்க கடன் வழங்கப்படுகிறது மாவட்டத்தில் இதுவரை 50 பயனாளிகளுக்கு ரூ.37.20 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்தார். கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் காந்திநாதன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் சுபாஷினி,மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்,சிறுபான்மையினர் நல அலுவலர் மாரி, துணை ஆட்சியர்(பயிற்சி) ராஜேஸ்வரி சுவி பங்கேற்றனர்.