/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் மொத்த வாக்காளர்கள் 16.72லட்சம்

ADDED : பிப் 24, 2026 06:02 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் சரவணன் வெளியிட்ட நிலையில் மாவட்டத்தில்உள்ள 7 சட்டசபை தொகுதிகளில் 16 லட்சத்து 72 ஆயிரத்து 75 வாக்காளர்கள் உள்ளனர். எஸ்.ஐ.ஆர்., படி 3 லட்சத்து 24 ஆயிரத்து 894 வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கும் இறுதி வாக்காளர் பட்டியலின் வெளியிடப்பட்டது. இதை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் சரவணன் வெளியிட்டார். அப்போது அவர் ''தேர்தல் கமிஷன் அறிவிப்பின்படி எஸ்.ஐ.ஆரில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அடிப்படையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் 2301 ஓட்டுச்சாவடிகள், 8 லட்சத்து 12 ஆயிரத்து 937 ஆண், 8 லட்சத்து 58 ஆயிரத்து 964 பெண், மூன்றாம் பாலினத்தவர் 174 என 16 லட்சத்து 72 ஆயிரத்து 75 வாக்காளர்கள் உள்ளனர்.
.....................................................................................................
சட்டசபை தொகுதி / ஓட்டுச்சாவடி / ஆண் / பெண் / மூன்றாம் பாலினத்தவர்கள் / மொத்தம்
................................................................................................
பழநி / 339 / 1,15,728 / 1,21,582 / 49 / 2,37,359ஒட்டன்சத்திரம் / 314 / 1,04,519 / 1,13,177 / 2 / 2,17,698ஆத்துார் / 341 / 1,25,056 / 1,34,773 / 17 / 2,59,846நிலக்கோட்டை (தனி) / 305 / 1,07,389 / 1,11,673 / 15 / 2,19,077 நத்தம் / 359 / 1,27,116 / 1,31,421 / 66 / 2,58,603திண்டுக்கல் / 316 / 1,14,893 / 1,22,765 / 21 / 2,37,679 வேடசந்துார் / 327 / 1,18,236 / 1,23,573 / 4 / 2,41,813மொத்தம் / 2,301 / 8,12,937 / 8,58,964 / 174 / 16,72,075
.....................................
வாக்காளர்கள் தங்களின் பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதை சரிபார்த்துக் கொள்வதற்காக மாவட்டத்திலுள்ள அனைத்து ஓட்டுச்சாவடி மையங்கள், கலெக்டர், ஆர்.டி.ஓ., தாசில்தார் அலுவலகங்களில் பொதுமக்கள் இறுதி வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டுள்ளது. 18 வயது பூர்த்தியடையும் புதிய வாக்காளர்களும் வாக்காளர் அடையாள அட்டை பெறவற்கு விண்ணபிக்கலாம் ''என்றார். டி.ஆர்.ஓ.,ஜெயபாரதி, உதவி கலெக்டர் வினோதினி, நேர்முக உதவியாளர் (பொது) கீர்த்தனா, அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
3 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர்., திருத்தத்திற்கு முன் 19 லட்சத்து 34 ஆயிரத்து 447 வாக்காளர்கள் இருந்தனர். தொடர்ந்து எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு பதிவேற்றம் செய்ததின்படி டிச.19ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 3 லட்சத்து 24 ஆயிரத்து 894 வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலையில் அதன்படி மொத்த வாக்காளர்கள் 16 லட்சத்து 9 ஆயிரத்து 553 என்றானது. இதையடுத்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், ஆட்சேபனை உள்ளிட்டவைகளுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி 62 ஆயிரத்து 522 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். எஸ்.ஐ.ஆர். திருத்தம், ஆட்சேபனை, பெயர் சேர்த்தல், நீக்கம், ஆட்சேபனைகள் நிவர்த்தி செய்யப்பட்டு நேற்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி மாவட்டத்தில் 16 லட்சத்து 72 ஆயிரத்து 75 வாக்காளர்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
..............
எஸ்.ஐ.ஆர்., திருத்தம்படி 7 சட்டசபை தொகுதி வாரியாக வாக்காளர்கள்
..............
தொகுதி / SIR முன் மொத்தம் / SIRல் நீக்கப்பட்டவர்கள் / வரைவு வாக்காளர் பட்டியல் எண்ணிக்கை / புதிதாக சேர்க்கப்பட்டவர்கள் / இறுதி வாக்காளர்கள்/
..........
பழநி / 2,79,264 / 52,174 / 2,27,090 / 10,269 / 2,37,359ஒட்டன்சத்திரம் / 2,43,283 / 34,127 / 2,09,156 / 8,542 / 2,17,698ஆத்துார் / 2,98,568 / 48,145 / 2,50,423 / 9,423 / 2,59,846நிலக்கோட்டை / 2,53,638 / 41,850 / 2,11,788 / 7,289 / 2,19,077நத்தம் / 2,95,156 / 46,133 / 2,49,023 / 9,580 / 2,58,603திண்டுக்கல் / 2,88,716 / 60,493 / 2,28,223 / 9,456 / 2,37,679வேடசந்துார் / 2,75,822 / 41,972 / 2,33,850 / 7,963 / 2,41,813மொத்தம் / 19,34,447 / 3,24,894 / 16,09,553 / 62,522 / 16,72,075
...............
திண்டுக்கல், பிப்.24-
திண்டுக்கல் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் சரவணன் வெளியிட்ட நிலையில் மாவட்டத்தில்உள்ள 7 சட்டசபை தொகுதிகளில் 16 லட்சத்து 72 ஆயிரத்து 75 வாக்காளர்கள் உள்ளனர். எஸ்.ஐ.ஆர்., படி 3 லட்சத்து 24 ஆயிரத்து 894 வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.