/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொடைக்கானலில் சுற்றுலா பொங்கல் விழா
/
கொடைக்கானலில் சுற்றுலா பொங்கல் விழா
ADDED : ஜன 15, 2024 04:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல் : கொடைக்கானலில் சுற்றுலா பொங்கல் விழா வில்பட்டி ஊராட்சியில் நடந்தது.
ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டினர், கொடைக்கானல் தனியார் பள்ளியில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். சிலம்பம், கரகாட்டம், மியூசிக் சேர், பானை உடைத்தல், கோலப்போட்டி நடந்தன. வெளிநாட்டினர் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். சுற்றுலா அலுவலர் சுதா வரவேற்றார்.
பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில் வெளிநாட்டினர் கலந்து கொண்டனர். வில்பட்டி ஊராட்சி தலைவர் பாக்கியலட்சுமி ராமச்சந்திரன், ஒன்றிய குழு தலைவர் சுவேதா ராணி, கவுன்சிலர் முத்துகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.