ADDED : ஜன 17, 2025 12:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்:பொங்கல் தொடர் விடுமுறையில் கொடைக்கானலுக்கு 2023ஐ காட்டிலும் இம்முறை குறைவான பயணிகளே வந்தனர்.
சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு தினமும் சுற்றுலா பயணிகள் வருவர். பொங்கல் விடுமுறைக்கு பல்வேறு பகுதியிலிருந்து மலை நகரில் முகாமிட்ட சுற்றுலா பயணிகள் இங்குள்ள பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, கோக்கர்ஸ் வாக், வனச்சுற்றுலா தலம், மன்னவனுார் சூழல் சுற்றுலா மையத்தை ரசித்தனர்.
ஏரிச்சாலையில் குதிரை, சைக்கிள், ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். 2023ல் 3 நாள் பொங்கல் விடுமுறையில் பிரையன்ட் பூங்காவில் 6868 பேர் பார்வையிட்ட நிலையில் தற்போது 3 நாளில் 6178 பேரே வருகை தந்துள்ளனர். இந்தாண்டு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது.