/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சாலையோர தடுப்பில் சுற்றுலா பஸ் மோதி விபத்து-;13 பேர் காயம்
/
சாலையோர தடுப்பில் சுற்றுலா பஸ் மோதி விபத்து-;13 பேர் காயம்
சாலையோர தடுப்பில் சுற்றுலா பஸ் மோதி விபத்து-;13 பேர் காயம்
சாலையோர தடுப்பில் சுற்றுலா பஸ் மோதி விபத்து-;13 பேர் காயம்
ADDED : டிச 21, 2024 02:11 AM

நத்தம்:திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மெய்யம்பட்டியில் நெடுஞ்சாலை தடுப்பில் தனியார் சுற்றுலா பஸ் மோதிய விபத்தில் 13 பேர் காயமடைந்தனர்.
கோபிசெட்டிபாளையத்தில் இருந்து நத்தம் வழியாக திருவாதவூர் கோயிலுக்கு தனியார் சுற்றுலா பஸ் சென்றது. பெருந்துறையை சேர்ந்த அருண் 45, ஓட்டினார். நேற்று அதிகாலை நத்தம் மெய்யம்பட்டி பகுதியில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
டிரைவர் அருண், வேனில் பயணம் செய்த கோபி செட்டிபாளையத்தை சேர்ந்த அமிர்தவள்ளி 51,பிரபாகரன் 52, மேனகா 49, காளியணன் 84, முத்துவேலப்பன் 68, சுப்ரமணி 73, கந்தசாமி 64, ஜோதிமணி 49, ஈஸ்வரி 70, கலைசெல்வி 60, நிர்மலாதேவி 70, வேலுச்சாமி 67, என 13 பேர் காயமடைந்தனர்.
இவர்கள் நத்தம் அரசு மருத்துவமனை, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.