/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை'யில் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடின
/
'கொடை'யில் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடின
ADDED : ஜூன் 07, 2025 02:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்:கொடைக்கானலில் மலர் கண்காட்சி,கோடை விழா நிறைவடைந்த நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைந்து முக்கிய சுற்றுலா தலங்கள் வெறிச்சோடின.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்து நிலையில் கொடைக்கானலுக்கு பயணிகள் வருகை மிகவும் குறைந்தது. இதையடுத்து பிரையன்ட் பூங்கா, வெள்ளி நீர்வீழ்ச்சி, ரோஜா பூங்கா, வன சுற்றுலா தலங்கள் மன்னவனுார் சூழல் சுற்றுலா தலம் உள்ளிட்டவை பயணிகள் வரத்தின்றி வெறிச்சோடி உள்ளன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஏரிச்சாலையிலும் இதே நிலை நீடிக்கிறது.