/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை'யில் ரோடு சேதத்தால் அல்லாடும் சுற்றுலா வாகனங்கள்
/
'கொடை'யில் ரோடு சேதத்தால் அல்லாடும் சுற்றுலா வாகனங்கள்
'கொடை'யில் ரோடு சேதத்தால் அல்லாடும் சுற்றுலா வாகனங்கள்
'கொடை'யில் ரோடு சேதத்தால் அல்லாடும் சுற்றுலா வாகனங்கள்
ADDED : நவ 12, 2024 05:38 AM

கொடைக்கானல்: கொடைக்கானல் மேல்மலை சுற்றுலா தலங்களுக்கு செல்லும் ரோடுகள் சேதமடைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் அல்லாடுகின்றனர்.
கொடைக்கானல் மேல்மலைப்பகுதியில் ஆன்மிக தலமாக பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில், மன்னவனுார் செம்மறி ஆடு பண்ணை, வனத்துறை சூழல் சுற்றுலா மையம், கிளாவரை புலவிசாறு அருவி உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன. நாள்தோறும் ஏராளமான பயணிகள் சென்று வரும் நிலையில் பெரும் தலைவலியாக இருப்பது இங்குள்ள சேதமான ரோடுகளே.
இன்ப சுற்றுலா வருகை தருவோரை இப்பகுதியில் உள்ள ரோடுகள் பாடாய்படுத்துகிறது. ராட்சத பள்ளங்களுடன் சிதிலமடைந்த ரோடால் வாகனங்கள் பழுதாகி நிற்கும் அவலமும் தொடர்கிறது.
இந்நிலையால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் போக்குள்ளது. ஆண்டுதோறும் ரோடு வளர்ச்சி பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்கியும் துளியும் பயனில்லாமல் மோசமான நிலையில் ரோட்டின் தரம் உள்ளது. சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்து ரோடுகளை துரிதமாக சீரமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கூறுகின்றனர்.

