/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை'யில் குவிந்த சுற்றுலா பயணிகள்
/
'கொடை'யில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ADDED : நவ 04, 2024 06:15 AM

கொடைக்கானல்; திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தொடர் விடுமுறையை அடுத்து 3வது நாளாக ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
கொடைக்கானலில் தொடர் மழை பெய்கிறது. இதையடுத்து குளு, குளு நகர் சில்லிட்டது. கனமழையால் உருவான திடீர் அருவிகளை பயணிகள் ரசித்தனர்.
பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, கோக்கர்ஸ்வாக்,வெள்ளி நீர்வீழ்ச்சி, மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம், வன சுற்றுலா தலங்களை பயணிகள் ரசித்தனர். ஏரிச்சாலையில் குதிரை, சைக்கிள் சவாரி, ஏரியில் படகு சவாரியும் செய்து மகிழ்ந்தனர்.
அவ்வப்போது தரையிறங்கிய மேகக் கூட்டம் என ரம்யமான சீதோஷ்ண நிலை நீடித்தது. நேற்றும் அரை மணி நேரம் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் இங்குள்ள அனுமதி பெறாத விடுதிகளில் கட்டணக் கொள்ளையும், உணவகங்களில் கூடுதல் விலையும் பயணிகளை சிரமப்படுத்தியது.