ADDED : பிப் 05, 2024 12:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல் : கொடைக்கானலில் நிலவும் சீதோஷ்ண நிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் மலை நகரில் முகாமிட்டனர்.
தரைப் பகுதியில் வெளுத்து வாங்கும் வெயிலை சமாளிக்க குளு, குளு நகரான கொடைக்கானலுக்கு சில தினங்களாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. இங்குள்ள பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, வெள்ளி நீர்வீழ்ச்சி, கோக்கர்ஸ் வாக், மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம், வன சுற்றுலாத்தலங்களை கண்டு ரசித்தனர். தொடர்ந்து ஏரிச் சாலையில் சைக்கிள், குதிரை சவாரி செய்தும், ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

