UPDATED : அக் 20, 2026 12:59 AM
ADDED : அக் 19, 2026 06:06 PM

அ நிறம் | அளவு
கொடைக்கானல்: கொடைக்கானலில் பூஜைகள் தின தொடர் விடுமுறையை அடுத்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர்.
வார விடுமுறை, ஆயுத பூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறையால் கொடைக்கானலில் பயணிகள் அதிகளவில் வருகை தந்தனர். இங்குள்ள பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, வெள்ளி நீர் நிகழ்ச்சி, வனச்சுற்றுலா தலம், கோக்கர்ஸ்வாக் பகுதிகளை கண்டு ரசித்தனர். தொடர்ந்து ஏரியில் படகு சவாரியும், ஏரி சாலையில் குதிரை, சைக்கிள் சவாரி செய்து மகிந்தனர். இங்கு நிலவிய ரம்யமான சூழலை பயணிகள் அனுபவித்து, ரசித்துச் சென்றனர்.
