/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை' ஏரிச்சாலையில் தடுமாறும் சுற்றுலா பயணிகள்
/
'கொடை' ஏரிச்சாலையில் தடுமாறும் சுற்றுலா பயணிகள்
ADDED : நவ 11, 2024 04:50 AM

கொடைக்கானல்: கொடைக்கானல் ஏரி சாலை நடைமேடையில் இடையூறாக குவிக்கப்பட்டுள்ள மின் கம்பிகளால் பயணிகள் தடுமாறும் நிலை உள்ளது.
கொடைக்கானல் சுற்றுலா தலத்தின் இதயமாக உள்ளது ஏரிச்சாலை. இதில் வளர்ச்சி பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடக்கிறது. இதில் ஒரு பகுதியாக ஏரி நடைமேடையில் அலங்கார மின் விளக்குகள் நகராட்சியால் அமைக்கப்படுகிறது.
இதற்கான மின் கம்பிகள் உள்ளிட்ட தளவாடங்கள் ஏரி நடைமேடையில் இடையூறாக குவிக்கப்பட்டுள்ளது. நடை பயிற்சி,நடைமேடையில் இளைப்பாறும் சுற்றுலா பயணிகள் தடுமாறி விபத்தில் சிக்குகின்றனர். நாள்தோறும் ஏராளமான பயணிகள் வரும் ஏரி பகுதி அலங்கோலமாக காட்சியளிப்பதால் பயணிகள் முகம் சுளிக்கின்றனர். நடைமேடையில் உள்ள இடையூறுகளை அகற்ற நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.