/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடையில்' குவிந்த சுற்றுலா பயணிகள்
/
'கொடையில்' குவிந்த சுற்றுலா பயணிகள்
ADDED : பிப் 26, 2024 07:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நிலவும் குளு, குளு சீதோஷ்ண நிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் முகாமிட்டனர்.
தரைப் பகுதியில் வெளுத்து வாங்கும் கோடை வெயிலை சமாளிக்க சில்லிடும் நகரான கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை சமீபகாலமாக அதிகம் உள்ளது. நேற்று வந்த சுற்றுலா பயணிகள் இங்குள்ள பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, வெள்ளி நீர்வீழ்ச்சி, கோக்கர்ஸ் வாக், மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம், வன சுற்றுலாத்தலங்களை கண்டு ரசித்தனர்.
ஏரிச்சாலையில் சைக்கிள், குதிரை, ஏரியில் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர். நகரில் அவ்வப்போது தரை இறங்கிய மேகக் கூட்டத்தை கண்டு ரசித்தனர்.

