/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை' ஏரியில் அத்துமீறும் சுற்றுலா பயணிகளால் ஆபத்து
/
'கொடை' ஏரியில் அத்துமீறும் சுற்றுலா பயணிகளால் ஆபத்து
'கொடை' ஏரியில் அத்துமீறும் சுற்றுலா பயணிகளால் ஆபத்து
'கொடை' ஏரியில் அத்துமீறும் சுற்றுலா பயணிகளால் ஆபத்து
ADDED : ஜன 03, 2025 06:43 AM

கொடைக்கானல்; கொடைக்கானல் ஏரியில் அத்துமீறும் சுற்றுலாப் பயணிகளால் விபத்து அபாயம் உள்ளது. கொடைக்கானல் வரும் பயணிகள் 5 கி. மீ., சுற்றளவில் உள்ள ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்வது வழக்கம்.
நகராட்சி, தமிழ்நாடு சுற்றுலாத்துறை மிதிபடகு, துடுப்பு படகுகளை இயக்குகின்றனர். பாதுகாப்பு கருதி லைப் ஜாக்கெட் வழங்கப்படுகிறது. மேலும் படகு சவாரியின் போது கடைபிடிக்கப்படும் நடைமுறைகளும் அலுவலக நுழைவாயிலில் எடுத்துரைக்கப்படுகிறது.
இதை துளியும் கண்டுகொள்ளாத சுற்றுலாப் பயணிகள் ஏரியின் நடுப்பகுதியில் லைப் ஜாக்கெட் அணியாமலும், படகில் நடனம் ஆடுவது, கால்களை வெளியில் தொங்க விடுவது, ஆபத்தான முறையில் படகின் மேல் ஏரி செல்பி எடுத்து கொள்வது என விரும்பத்தகாத நிகழ்வுகளில் ஈடுபடுகின்றனர்.
ஆழம் மிகுந்த நடுப் பகுதியில் இது போன்று ஈடுபடும் சுற்றுலா பயணிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சுற்றுலாத்துறை , நகராட்சி நிர்வாகத்தினர் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.