நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் தலைவர் சியாமளா தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் கல்பனாதேவி முன்னிலை வகித்தார்.
செயல் அலுவலர் கோபிநாத் வரவேற்றார். நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.37 லட்சம் மதிப்பில் அண்ணாநகர் பஸ் நிறுத்தம் முதல் ஐயப்பன் கோயில் வரை தார் ரோடு புதுப்பித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இளநிலை உதவியாளர் மோகனப்பிரியா நன்றி கூறினார்.