/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பேரூராட்சி கவுன்சில் கூட்டங்கள்
/
பேரூராட்சி கவுன்சில் கூட்டங்கள்
ADDED : நவ 30, 2024 05:48 AM
வடமதுரை; அய்யலுார் பேரூராட்சி கூட்டம் தலைவர் கருப்பன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் அன்னலட்சுமி முன்னிலை வகித்தார். 15வது நிதி கமிஷன் மானிய திட்டத்தில் ரூ.10.80 லட்சத்தில் குடிநீர் பணிகள், ரூ.14.35 லட்சத்தில் 'பேவர் பிளாக்' பதிக்கும் பணிகள் செய்வது, 15 வார்டுகளிலும் புதிதாக தலா 5 தெரு விளக்குகள் அமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வடமதுரை பேரூராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் நிருபாராணிகணேசன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் பத்மலதா முன்னிலை வகித்தார். கவுன்சிலர் கணேசன் வரவேற்றார். 8வது வார்டு சமுதாய கூடத்தை ரூ.9.50 லட்சத்தில் பழுது நீக்கம், சீரமைப்பு பணி செய்வது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.