ADDED : நவ 19, 2025 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டில் பேரூராட்சிகளின் இயக்குனர் பிரதீப்குமார், இணை இயக்குனர் காளியப்பன் வத்தலக்குண்டு பேரூராட்சி குப்பை கிடங்கை பார்வையிட்டனர்.
துணிக்கழிவிலிருந்து கால்மிதியடி, மண்புழு உரம் , உணவு கழிவிலிருந்து மாடு வளர்ப்பு, பூங்கா அமைப்பையும் பார்வையிட்டனர். பேரூராட்சி அலுவலகம் அருகே கட்டப்படும் கூடுதல் கட்டட பணிகளை பார்வையிட்டனர். பேரூராட்சி தலைவர் சிதம்பரம், துணைத்தலைவர் தர்மலிங்கம், செயல் அலுவலர் சரவணகுமார், தலைமை எழுத்தர் முருகேசன் உடன் இருந்தனர்.

