ADDED : டிச 01, 2024 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : வடமதுரையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்க ஒன்றிய மாநாடு நடந்தது. தலைவர் போஸ் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தார்.
தலைவராக போஸ், செயலாளராக பெருமாள், பொருளாளராக வள்ளியம்மாள், துணைத் தலைவராக உத்திரச்செல்வி, இணைச் செயலாளராக சுப்பிரமணி தேர்வு செய்யப்பட்டனர். திண்டுக்கல்லில்டிச.11ல் நடக்கும் மாவட்ட மாநாட்டில் திரளாக பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டது. கணினி இயக்குபவர் காஞ்சனா நன்றி கூறினார்.

