ADDED : மார் 11, 2024 06:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைவர் ஜேபி சரவணன் கூறியதாவது: பழநி கிரிவீதி அனைத்து சாலைகளும் அடைக்கப்பட்டு தற்போது அசாதாரண சூழ்நிலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பழநி அடிவாரம் பகுதி வர்த்தகர்களுக்கு தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு முழு ஆதரவு அளிக்கிறது.
அடிவார வர்த்தகர்களுக்கு, தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் மாநில தலைவர், மண்டல தலைவர் அனுமதி உடன் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசித்து போராட்டங்களை முன்னேடுத்து செயல்படுவோம் என்றார்.
மாநில இணைச் செயலாளர் பாஸ்கரன், மாவட்ட கவுரவ தலைவர் கண்ணுச்சாமி, மாவட்ட பொருளாளர் செந்தில் குமார், செய்தி தொடர்பாளர் ஜெகதீஷ், சட்ட ஆலோசகர்கள் மணிகண்ணன், ஆறுமுகம் கலந்து கொண்டனர்.

