ADDED : நவ 27, 2024 04:45 AM

திண்டுக்கல் : உணவு மருந்துகள்,வேளாண்மை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கங்கள்,விவசாய சங்கங்கள் சார்பில் திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
எல்.பி.எப்., மாவட்ட செயலாளர் அழகர்சாமி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சென்ராயன், சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் கணேசன், மாவட்ட செயலாளர் பிரபாகரன், ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலாளர் நாச்சிமுத்து, ஐ.என்.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் முருகன், ஏ.ஐ.சி.சி.டி.யு. மாவட்ட செயலாளர் ரவி, எம்.எல்.எப்., மாவட்ட செயலாளர் மோகன், எச்.எம்.எஸ்., மாவட்ட செயலாளர் சையது,ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெருமாள்,தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் பெருமாள் பங்கேற்றனர்.