ADDED : நவ 23, 2025 03:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள தொழிலாளர்களுக்கு விரோதமான 4 சட்டங்களை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். தொழிலாளர்கள் விரோத போக்கை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
எல்.பி.எப்.,மாவட்ட கவுன்சில் செயலாளர் அழகர்சாமி தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., பாலசந்திரபோஸ் ஐ.என்.டி.யு.சி. முருகன், ஏ.ஐ.டி.யு.சி.,பாலன், ஹச்.எம்.எஸ்.சையது இப்ராகிம், யு.டி.யு.சி., தங்கப்பெருமாள் கலந்துகொண்டனர்.

