/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொடைக்கானலில் காலாவதியான வாகனத்தால் போக்குவரத்து பாதிப்பு
/
கொடைக்கானலில் காலாவதியான வாகனத்தால் போக்குவரத்து பாதிப்பு
கொடைக்கானலில் காலாவதியான வாகனத்தால் போக்குவரத்து பாதிப்பு
கொடைக்கானலில் காலாவதியான வாகனத்தால் போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஏப் 02, 2025 03:35 AM

கொடைக்கானல் : கொடைக்கானல் ரோட்டோரங்களில் நிறுத்தப்பட்டுள்ள காலாவதியான வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோடை சீசனை முன்னிட்டு உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்படி போக்குவரத்து நெரிசல் ,அடிப்படை வசதி, தற்காலிக பார்க்கிங் உள்ளிட்ட சீர்திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே செண்பகனுாரிலிருந்து மெயின் ரோட்டில் போக்குவரத்திற்கு இடையூறாக காலாவதியான ஏராளமான வாகனங்கள் மாதக்கணக்கில் நிறுத்தப்பட்டு போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக உள்ளது. கொடைக்கானல் மன்னவனுார் ரோட்டிலும் இதுபோன்ற நிலை நெரிசலுக்கு வித்திடுகிறது. சில மாதத்திற்கு முன் கீழ்குண்டாறு பகுதியில் விபத்துக்குள்ளான வாகனம் அகற்றப்படாமல் விபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. கொடைக்கானல் நகர் பகுதியில் பாரபட்சமின்றி காலாவதியான வாகனங்களை அகற்ற வேண்டும். மாவட்ட நிர்வாகம் இதன் மீது துரிதம் காட்ட வேண்டும்.