/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆத்து மேட்டில் ஸ்தம்பித்த போக்குவரத்து
/
ஆத்து மேட்டில் ஸ்தம்பித்த போக்குவரத்து
ADDED : ஜூன் 08, 2025 04:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார் : வேடசந்துார் வடமதுரை ரோட்டில் உள்ள பஸ் ஸ்டாண்டில் கட்டடப் பணிகள் நடைபெறுவதால் மூடப்பட்டுள்ளது.
தற்காலிக பஸ் ஸ்டாண்ட் ஆத்துமேடு கரூர் ரோட்டில் செயல்படுகிறது. இதனால் அனைத்து பஸ் போக்குவரத்து,பொதுமக்களின் பயன்பாடு ஆத்துமேட்டை சுற்றியே நடைபெறுகின்றன.
நேற்று மாலை நுாற்பாலை பஸ் , வாகனங்கள், பொதுமக்கள் செல்ல ஆத்து மேட்டில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால் வடமதுரை, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், கரூர் ரோடு என நான்கு ரோடுகளிலும் வாகனங்கள் வரிசையில் நின்றன. போக்குவரத்து போலீசார் இல்லாத நிலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து தடைப்பட்டது.