/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை' மேல்மலை கிராமத்தில் தொடரும் போக்குவரத்து நெரிசல்; மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா

ADDED : ஏப் 20, 2025 11:59 PM

கொடைக்கானல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமத்தில் தொடரும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
-கொடைக்கானல் மன்னவனூரில் வனத்துறை சூழல் சுற்றுலா மையம் மற்றும் மத்திய அரசு செம்மறி ஆட்டுப்பண்ணை உள்ளது. துவக்கத்தில் இச்சுற்றுலா தலங்களில் பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டன. நாளடைவில் பார்க்கிங் வசதி செய்யப்படாமல் வாகனங்கள் கவுஞ்சி, பூண்டி, கிளவரை செல்லும் மெயின் ரோட்டில் நிறுத்தப்படுகின்றன.
இங்குள்ள தொலைதூர கிராமத்தினர் தங்களது கிராமப் பகுதியை எளிதில் செல்ல முடியாமல் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசலால் அவதிப்பட்டனர்.
சீசனில் மேல்மலை கிராமங்களில் பயணிகள் குவிவதால் இங்கு போக்குவரத்து நெரிசல் என்பது தீர்க்க முடியாத பிரச்னையாக உள்ளது.
இருப்பினும் இந்த சுற்றுலாத்தலங்களுக்கு வரும் வாகனங்கள் ரோட்டோரம் நிறுத்தப்படுவது பெரும் பிரச்சனையாக உள்ளது.
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மன்னவனூரில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு பார்க்கிங் வசதியை கட்டாயப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.