/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி ரோடு, தாராபுரம் ரோட்டில் தொடரும் போக்குவரத்து நெரிசல்
/
பழநி ரோடு, தாராபுரம் ரோட்டில் தொடரும் போக்குவரத்து நெரிசல்
பழநி ரோடு, தாராபுரம் ரோட்டில் தொடரும் போக்குவரத்து நெரிசல்
பழநி ரோடு, தாராபுரம் ரோட்டில் தொடரும் போக்குவரத்து நெரிசல்
ADDED : ஜூன் 03, 2025 12:45 AM

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் பழநி ரோடு, தாராபுரம் ரோடு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் தொடர்வதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
மதுரை, ராமநாதபுரம், கன்னியாகுமரி ,துாத்துக்குடி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு அரசு பஸ்கள் அதிகமாக செல்கின்றன. இதேபோல் பழநிக்கும் அரசு, தனியார் பஸ்கள் செல்கின்றன.
ஒட்டன்சத்திரம் நகருக்குள் வரவேண்டிய தேவை இல்லாத வாகனங்கள் லெக்கையன்கோட்டை பைபாஸ் ரோடு வழியாக சென்று விடுகிறது.
இருந்தபோதிலும் ஒட்டன்சத்திரம் நகருக்குள் போக்குவரத்து குறைந்தபாடில்லை. அடிக்கடி நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
ஒட்டன்சத்திரத்திலிருந்து தாராபுரம் ரோடு வழியாக கோவை, திருப்பூர் செல்ல ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட் வழியாக வரும் வாகனங்கள் பழநி ரோட்டில் பயணித்து தாராபுரம் ரோட்டில் செல்ல வேண்டியது உள்ளது.
பழநி ரோடும் தாராபுரம் ரோடும் சந்திக்கும் இடத்தில் வாகனங்கள் வேகமாக திரும்புவதால் பல நேரங்களில் விபத்து ஏற்படுகிறது. இதை கருதி வாகனங்கள் எளிதில் திரும்பி செல்லும் வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
விபத்தை குறைக்கலாம்
சுரேஷ்குமார், திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அசோசியேஷன் தலைவர், ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் பழநி ரோடு, தாராபுரம் ரோடு ஆகியவற்றில் அதிகப்படியான வாகனங்கள் செல்வதால் அடிக்கடி நெரிசலில் சிக்கி கொள்கின்றன.
ஆக்கிரமிப்பு காரணமாக வாகனங்களை இயக்க சிரமம் ஏற்படுவதால் அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. வாகனங்கள் சிரமம் இன்றி செல்லும் வகையில் வழிவகை ஏற்படுத்தி தர வேண்டும்.
போக்குவரத்தை சீரமையுங்க
டி.ஹாரால்டு ஜாக்சன், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திண்டுக்கல் மாவட்ட செயற்குழு உறுப்பினர், ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் நகருக்குள் வாகனங்கள் அதிகமாக செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
ரோடு பகுதியை டூவீலர்கள், தள்ளுவண்டிகள், சிறுகடைகளை ஆக்கிரமத்துள்ளதால் வாகனங்கள் நெரிசலில் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
வாகன ஓட்டிகள் சிரமமின்றி செல்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.