/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ராட்சத 'பாய்லர்' லாரியால் போக்குவரத்து பாதிப்பு
/
ராட்சத 'பாய்லர்' லாரியால் போக்குவரத்து பாதிப்பு
ADDED : மார் 09, 2026 06:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: வேடசந்துார் வழியாக ராட்சத 'பாய்லர்' ஏற்றிச்சென்ற கனரக லாரியால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருச்சி அருகே காகித நகரில் காகித ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்கு ராட்சத பாய்லரை வட மாநிலத்தில் இருந்து கனரக லாரி மூலம் கொண்டு சென்றனர். வேடசந்துார்- வடமதுரை ரோட்டில் சென்ற போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வேடசந்துார் நகரை லாரி கடக்க ஒரு மணி நேரம் ஆகி விட்டது. மிகப்பெரிய பாய்லரை ஏற்றிக்கொண்டு நகர் வழியாக லாரி கடந்து சென்றதை பொதுமக்கள் ரோட்டோரம் நின்று வேடிக்கைப் பார்த்தனர்.

