/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரோட்டில் நடக்கும் சந்தையால் போக்குவரத்து பாதிப்பு
/
ரோட்டில் நடக்கும் சந்தையால் போக்குவரத்து பாதிப்பு
ரோட்டில் நடக்கும் சந்தையால் போக்குவரத்து பாதிப்பு
ரோட்டில் நடக்கும் சந்தையால் போக்குவரத்து பாதிப்பு
ADDED : டிச 06, 2025 09:42 AM

வடமதுரை: அய்யலுாரில் அடிப்படை வசதிகள் இல்லாமல் இயங்கும் வாரச்சந்தையால் வியாபாரிகள், பொது மக்கள் பரிதவிக்கின்றனர்.
அய்யலுார் சந்தைக்குள் மழை பெய்தாலே சகதியுமாக மாறுகிறது. இங்கு சகதி ஏற்படுவதை தடுக்கும் வகையில் மண் நிரப்ப வேண்டும்.
நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்லும் இங்கு கழிப்பறை வசதி என்பது இல்லை.
அருகிலுள்ள விளை நிலத்தையே திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர்.
வளாகத்திற்குள் மேற்கு பக்கம் அதிக காலியிடம் இருந்தும் அப்பகுதி வரை வியாபாரம் நடக்க வழி செய்யாததால் பெரும்பகுதி வியாபாரிகள் திண்டுக்கல் திசை சர்வீஸ் ரோடு, களர்பட்டி ரோட்டில் நின்றவாறே ஆடு, கோழி வியாபாரத்தில் ஈடுபடுவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.
இதனால் சந்தை நாளில் காலை நேரத்தில் பல விரைவு பஸ்கள் சர்வீஸ் ரோட்டில் வராமல் மேம்பாலம் வழியே சென்றுவிடுதால் பஸ்சிற்காக காத்திருப்போர் பாதிக்கின்றனர்.
சந்தை வளாகத்திற்குள் மேற்கு பகுதியில் காலியாக இருக்கும் பகுதிக்கு வியாபாரத்தை மாற்றி மெயின் ரோட்டில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வேண்டும்.

