/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சுரங்க வழிப்பாதையில் ‛ 'டிராபிக் ஜாம்'
/
சுரங்க வழிப்பாதையில் ‛ 'டிராபிக் ஜாம்'
ADDED : மார் 17, 2024 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் நகர பொதுமக்கள் சார்பாக தமிழக முதல்வர், நெடுஞ்சாலை துறை நிர்வாகம், கலெக்டர், எஸ்.பி., அலுவலத்திற்கு அனுப்பப்பட்ட பதிவு தபால் மனுவில், பழைய கரூர் ரோட்டில் 7ஆண்டுகளாக நடந்து வந்த சுரங்கப்பாதை பணி தற்போது முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இந்த பாதையின் இடதுபுறமாக உள்ள கடைகளில் நிறுத்தப்படும் வாகனங்கள், நிரந்தர பார்க்கிங்காக கிடக்கும் ரோட்டோர வண்டி கடைகளால் போக்குவரத்திற்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்புக்களை அகற்றி வழிப்பாதையை சீர்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்க பட்டுள்ளது.

