/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநியில் வெறுமனே காட்சிதரும் போக்குவரத்து சிக்னல்கள்
/
பழநியில் வெறுமனே காட்சிதரும் போக்குவரத்து சிக்னல்கள்
பழநியில் வெறுமனே காட்சிதரும் போக்குவரத்து சிக்னல்கள்
பழநியில் வெறுமனே காட்சிதரும் போக்குவரத்து சிக்னல்கள்
ADDED : பிப் 20, 2024 06:01 AM

பழநி: பழநியில் முக்கிய சாலை சந்திப்புகளில் இயங்காத போக்குவரத்து சிக்னல்களால் பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர். பழநியில் மயில் ரவுண்டானா, வேல் ரவுண்டானா, டிரவலர்ஸ் பங்களா ரவுண்டானா, ரெணகாளியம்மன் கோயில் சந்திப்பு, சாமி தியேட்டர் சந்திப்பு, கோவை பழைய தாராபுரம் ரோடு சந்திப்பு, பழநியாண்டவர் பாலிடெக்னிக் கல்லுாரி அருகே, சிவகிரிப்பட்டி பைபாஸ் திண்டுக்கல் ரோடு பகுதிகளில் போக்குவரத்து சிக்னல்கள் உள்ளன. சாலைச் சந்திப்புகளில் உள்ள இந்த சிக்னல்கள் வேலை செய்வது இல்லை.
இவைகள் அனைத்தும் சாலைகளில் காட்சிப் பொருளாகவே உள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசல் முக்கிய நேரங்களான காலை, மாலையில் அதிக அளவில் ஏற்படுகிறது.
பழநி முக்கிய தலமாக உள்ளதால் அதிக அளவில் வெளியூர் பக்தர்கள் வருகின்றனர். விடுமுறை, முகூர்த்த நாட்களில் சாலைகளில் நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
அதிகமாக வாகன போக்குவரத்து உள்ள நேரங்களில் போக்குவரத்து போலீசார் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.இதை தடுக்க சிக்னல்களை பயன்பாட்டிற்கு கொண்டு போலீசார் நடவடிக்கை அவசியமாகிறது.
நடவடிக்கை எடுங்க
ராமச்சந்திரன், பா.ஜ., நகரத் தலைவர் : பழநியில் பல இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் செயல்படாமல் உள்ளன. இதனால் பழநி வரும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். விபத்துக்களும் ஏற்படுகின்றன. பக்தர்கள் வரும் வாகனங்கள் ,பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். இது தொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காத்திருக்கும் சூழல்
சிவா, சமூக ஆர்வலர் : வேல் ரவுண்டானா, மயில் ரவுண்டானா ரெணகாளியம்மன் கோயில் பகுதிகள் நெரிசல் மிகுந்தவை. குறிப்பாக புது தாராபுரம் ரோட்டில் ரயில்வே கேட் அடைக்கப்படும் போது வாகனங்கள் நீண்ட தொலைவு காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது அந்த நேரங்களில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர் . மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீர்வு
திண்டுக்கல் பழநி நகரில் உள்ள சிக்னல்களை சரி செய்து சரியான கால அளவில் வாகனங்களை முறைப்படுத்தி செலுத்தும் வகையில் சிக்னல்களை இயக்க திண்டுக்கல் எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து போலீசார் இடையூறு இன்றி பணிபுரிய முக்கிய சிக்னல் பகுதிகளில் பணிபுரியும் போலீஸ் எண்ணிக்கையையும் அதிகப்படுத்த வேண்டும். சிக்னல் கண்காணிப்பு மூலம் போக்குவரத்து விதி மீறி வரும் வாகன ஓட்டிகளையும் கண்காணிக்க முடியும்

