/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கும்பகோணத்தில் இருந்து ஒட்டன்சத்திரம் பழநி வழியாக குருவாயூருக்கு ரயில் சேவை; பக்தர்கள் எதிர்பார்ப்பு

ADDED : ஆக 27, 2025 12:48 AM
ஒட்டன்சத்திரம்; கும்பகோணத்தில் இருந்து  தஞ்சாவூர்,  திருச்சி, திண்டுக்கல்,  ஒட்டன்சத்திரம்,  பழநி, உடுமலை,  பொள்ளாச்சி வழியாக குருவாயூருக்கு ரயில் சேவை தொடங்க வேண்டுமென பயணிகளிடையே எதிர்பார்ப்புநிலவுகிறது.
கும்பகோணத்தை சுற்றி உள்ள  நவக்கிரக கோயில்கள் ,  தஞ்சை பெரிய கோயிலில் வழிபாடு செய்வதற்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர். பழநி,  ஒட்டன்சத்திரம்,  திண்டுக்கல்  சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்களும் ஆன்மிக சுற்றுலா சென்று வருகின்றனர். இதேபோல் கும்பகோணம், திருச்சி,  திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழநி  பகுதிகளில் இருந்து குருவாயூருக்கு ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர்.
இவர்களுக்கு நேரடியான ரயில் சேவை  இல்லாததால் பஸ்களையே நம்ப வேண்டியுள்ளது. திண்டுக்கல் வழியாக செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் மதுரை,  திருவனந்தபுரம் சுற்றி  குருவாயூர் செல்வதால் இப்பகுதியில் உள்ள பக்தர்கள் நீண்ட நேரம் பயணிக்க வேண்டி உள்ளது. இது போல் பழநி,  ஒட்டன்சத்திரம் பகுதிகளில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் செல்வதற்கு நேரடி ரயில் வசதி இல்லை.
திண்டுக்கல் சென்று அங்கிருந்து வேறு  ரயிலில் மாற வேண்டும். இதனால் இப்பகுதி மக்கள்  பஸ்களையே நம்ப வேண்டியுள்ளது.
குடும்பத்துடன் ஆன்மிக சுற்றுலா செல்வதற்கு ரயில் பயணம் பல வகைகளில் சிறந்ததாக உள்ளது. கட்டணம்குறைவு, டாய்லெட் வசதி இருப்பதால் ரயில் பயணமே பயணிகளின் முதல் தேர்வாக உள்ளது.
எனவே பக்தர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் கும்பகோணத்திலிருந்து ஒட்டன்சத்திரம், பழநி, உடுமலை, பொள்ளாச்சி வழியாக குருவாயூருக்கு ரயில் சேவை தொடங்கவேண்டும்.