ADDED : மார் 14, 2024 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: அய்யலுார் ஆர்.வி.எஸ்., குமரன் கலை அறிவியல் கல்லுாரியில் பி.காம்., சி.ஏ., துறை சார்பில் அலுவலக கம்ப்யூட்டர் பயன்பாடுகள் குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
முதல்வர் திருமாறன் தலைமை வகித்தார். துறைத் தலைவர் ஜீவானந்தம் முன்னிலை வகித்தார். உதவி பேராசிரியர் பாலா வரவேற்றார். விவேகானந்தா கல்லுாரி பேராசிரியர் கார்த்திகேயன் பயிற்சி தந்தார். பேராசிரியர் முத்துலட்சுமி நன்றி கூறினார்.

