ADDED : ஜன 24, 2026 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி: காந்திகிராம பல்கலையின் கல்வியியல் துறை சார்பில் ஆசிரிய மாணவர்களுக்கான பயிற்சி பட்டறை நடந்தது.
பல்கலை பொறுப்பு பதிவாளர் சுந்தரமாரி தலைமை வகித்தார். அவர் பேசுகையில், படிப்பை முடித்ததும் வேலை பெற வேண்டும் என ஒவ்வொருவரும் எண்ணு வதுண்டு.
குறிப்பிட்ட வேலையை மட்டும் எதிர் நோக்காமல் எந்த வேலையை செய்ய முடியுமோ, அதற்கேற்ற பணியை தேர்வு செய்ய வேண்டும். எந்த வேலையாக இருந்தாலும் சவாலாக எடுத்து பணியாற்ற வேண்டும். குழுவாக பணியாற்றும் போது, அபரிதமான வளர்ச்சி ஏற்படும் என்றார்.
சேலம் பெரியார் பல்கலை உதவி பேராசிரியர் வினோத்குமார்,இணை பேராசிரியர் தேவகி, உதவி பேராசிரியர் பொன்னுசாமி, கவுரவ விரிவுரையாளர்கள் கிங்ஸ்டன், சஜிதா பேசினர். பேராசிரியர் ஸ்ரீதேவி வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் பக்தவத்சல பெருமாள் நன்றி கூறினார்.

