ADDED : நவ 06, 2025 06:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எரியோடு: வேடசந்துார் வேளாண்மை, உழவர் நலத்துறை சார்பில் செயல்படும் அட்மா திட்டத்தில் எரியோடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இயற்கை வேளாண்மை தொடர்பான புதுமையான செயல்பாடுகள் குறித்து செயல் விளக்கம் தரப்பட்டது.
வேளாண் உதவி இயக்குனர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் நிர்மலா முன்னிலை வகித்தார். தொழில்நுட்ப வல்லுனர்கள் ராஜேந்திரன், சந்திரசேகர், ஜெகநாதன், சரவணன் பங்கேற்றனர்.

